Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மணிலா,
பிலிப்பைன்ஸ் பல தீவு கூட்டங்களை உள்ளடக்கிய நாடாகும். நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும் இந்த நாட்டில், பல எரிமலைகளும்
உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க பெரிய எரிமலைகளில் லூசன் தீவில் உள்ளதால் எரிமலையும் ஒன்று. தலைநகர் மணிலாவில் இருந்து தெற்கே 66 கி.மீ. தொலைவில்
ஏரியின் நடுவே அமைந்துள்ள அந்த எரிமலை நேற்றுமுன்தினம் முதல் குமுறத் தொடங்கியது. அதில் இருந்து லார்வா குழம்புகள் வெளியேறியதால், ஏற்பட்ட கரும்புகை வானுயர எழுந்தது.
அந்த எரிமலை சில மணிநேரத்தில் அல்லது சில நாள்களில் வெடித்து சிதறலாம் என்று அந்த நாடு அரசு அறிவித்துள்ளது.
மேலும் நிலநடுக்க எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த எரிமலையை சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் 50 ஆயிரம் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு தெரிவித்துள்ளது. இதையொட்டி சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டது.
இதனால் 240 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1911-ம் ஆண்டு தால் எரிமலை வெடித்து சிதறியதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக 1977-ம் ஆண்டு அந்த எரிமலை வெடித்தது.
43 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தால் எரிமலை வெடிக்கத் தொடங்கி இருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
32 minute ago
40 minute ago
49 minute ago