2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

ஏவுகணை இல்லாமல் வட கொரியாவின் பிறந்த தினம்

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட கொரியா தனது 70ஆவது பிறந்த தினத்தை நேற்றுக் கொண்டாடியிருந்த நிலையில், ஆயிரக்கணக்கான படைவீரர்களும் ஆட்லறிகளும் கவச வாகனங்களும் வட கொரியத் தலைநகர் பியொங்யங்கில் நேற்று அணிவகுத்திருந்த நிலையில், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா நேற்றுக் காட்சிப்படுத்தியிருக்கவில்லை.

இந்நிலையில், சீனாவுடனான தனது நட்புறவை காண்பிக்கும் முகமாக வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் பிரதிநிதியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவின் ஏழு உறுப்பினர்களிலொருவரான லி ஸான்ஷுவுடன் அணிவகுப்பைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்தோருக்கு ஒன்றாகக் கையசைத்துக் காண்பிடித்திருந்தார்.

இரண்டாம் உலகப் போரின் இறுதி நாட்களில், சோவியத் ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் கொரியத் தீபகற்பத்தை தங்களுக்கிடையே பகர்ந்து கொண்ட மூன்றாண்டுகளுக்குப் பின்னர் 1948ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு என்றழைக்கப்படும் வடகொரியா பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், வட கொரிய அரசியல் நாட்காட்டியில் குறித்த நாளே பிரதானமாக இருக்கின்ற நிலையில், வழமையாக தனது புதிய வன்பொருளை இதில் வடகொரியா காண்பிக்கும். எனினும், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சிங்கப்பூர் சந்திப்பு, இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜயே-இன்னுடனான வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் மூன்றாவது சந்திப்பு என்பனவற்றை அதிகம் இராணுவமயப்படுத்தப்பட்ட குறித்த நாள் பாதிக்கும் என்பதாலேயே கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெறவில்லை எனத் தெரிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--