2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

ஐ.எஸ் தளபதி ஒமர் சேச்சென்னின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 17 , மு.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில், ஐக்கிய அமெரிக்காவின் வான்தாக்குதலில் காயமடைந்த, முன்னாள் சோவியத் யூனிய போராளிகளிடையே பிரபலமான முன்னணி ஐ.எஸ்.ஐ.எஸ் தளபதியான ஒமர் அல்-ஷிஷனி காயம் காரணமாக மரணமடைந்துள்ளதாக மூத்த ஈராக்கிய அதிகாரி ஒருவரும் சிரிய ஆர்வலர் குழுவொன்றும் தெரிவித்துள்ளது.

தர்கான் படிரஷ்விலி என்ற இயற் பெயரைக் கொண்ட ஷிஷனி, கடந்த மாதம் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்திருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் பலம் வாய்ந்த இடமான சிரியாவில் றக்காவில் இவ்வாரம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை, ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் பேச்சாளர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறெனினும் ஷிஷனியின் தந்தையான டெய்முராஸ் படிரஷ்விலி, மேற்படித் தகவல் பிழையானது எனத் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X