2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

கனேடியப் பிரதமரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியானது

Editorial   / 2020 மார்ச் 13 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கிரேகோயர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சோஃபியிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் அது உறுதி செய்யப்பட்டதாக கனடியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

ட்ரூடோவிடம் தற்போது கிருமித்தொற்று அறிகுறி ஏதும் தென்படவில்லை, என்றபோதும் அவர் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்.

லண்டனில் உரையாற்றி விட்டுக் கனடா திரும்பிய சோஃபிக்குச் சளிக்கான அறிகுறி இருந்தது.

உடனே மருத்துவரை நாடிய அவர், வீட்டிலேயே தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டதாகச் சொன்னார்.

அத்துடன், மாநிலத் தலைவர்களை நேரில் சந்திப்பதற்குப் பதிலாக தொலைபேசி மூலம் அவர்களுடன் ட்ரூடோ கலந்துரையாடுவார்.

கனடாவில் நூற்றுக்கும் அதிகமானோர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனடாவின் பத்து மாநிலங்களில் ஆறில் கிருமிப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .