Editorial / 2017 மே 31 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரெமி கோர்பைன் மீது, தனிப்பட்ட தாக்குதலை மேற்கொண்டதாகவும், அதன் மூலமாக, தனது பிரதமர் பதவியை அவர் அவமானப்படுத்திவிட்டதாகவும், ஐ.இராச்சியப் பிரதமர் தெரேசா மே மீது, விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஐ.இராச்சியத்தின் தேர்தல், ஜூன் 8ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஆரம்பத்தில், பிரதமர் மேயின் பழைமைவாதக் கட்சி, இலகுவாக வெற்றிபெறுமென எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, அந்த நிலைமை, இறுக்கமடைந்துள்ளது. இதனால், பிரசாரத்தின் போது, கடுமையான கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், வொல்வெர்ஹம்ப்டனில் இடம்பெற்ற பிரசார நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மே, ஜூன் 8ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிபெற்றால், ஜெரெமி கோர்பைன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐ.இராச்சியம் விலகுவதற்கான (பிரெக்சிற்) பேரம்பேசல்களுக்குத் தயாராக இருக்க மாட்டார் என்று குறிப்பிட்டார்.
“பிரெக்சிற் தொடர்பான அவரது நிலைப்பாட்டால், பேரம்பேசல் பகுதியில் அவர், தனியாகவும் நிர்வாணமாகவும் காணப்படுவார்” என்று தெரிவித்தார்.
அவரது இந்தக் கருத்து, “அவர் தனிமையில் இருப்பார்” அல்லது “எதுவும் புரியாத நிலையில் இருப்பார்” என்ற அர்த்தத்திலும் எடுத்துக் கொள்ளப்படக் கூடியது. ஆனால், தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர் மே, “[கோர்பைன், தனியாகவும் நிர்வாணமாகவும் இருக்கும்] அந்த விம்பம், சிந்தித்துப் பார்க்கமுடியாத ஒன்று என்பதை நான் அறிவேன். ஆனால், இது மிகவும் பாரதூரமானது” என்று தெரிவித்தார்.
அவரது இந்தக் கருத்து, கோர்பைனை, தனிப்பட்ட ரீதியில் தாக்குவதாக அமைந்துள்ளது என்று, விமர்சனங்கள் எழுந்துள்ளன.
23 minute ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
7 hours ago
7 hours ago
8 hours ago