2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

காஷ்மிருக்குள் நுழைவதற்கு எதிர்கட்சித் தலைவர்களுக்கு மறுப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்மு காஷ்மிர் விமானநிலையத்திலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளியேறுவது நேற்று  தடுக்கப்பட்டிருந்தது.

ஜம்மு காஷ்மிருக்கான சுயாட்சியை மீளப் பெறும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவுக்கெதிரான வாரக்கணக்கான் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து ஒழுங்கை நிலைநாட்ட ஜம்மு காஷ்மிர் அரசாங்கம் பணியாற்றுகையில், ஜம்மு காஷ்மிர் தலைநகர் ஶ்ரீநகருக்கு விஜயம் செய்ய வேண்டாமென ஜம்மு காஷ்மிர் அரசாங்கம் அரசியல் தலைவர்களை நேற்று முன்தினம் வினவியிருந்தது.

இந்நிலையிலேயே எச்சரிக்கையை மீறி இந்திய தேசிய காங்கிரஸ், கம்யூனிஸ் கட்சி, அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் குழாமொன்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலிருந்து ஶ்ரீநகருக்குச் சென்றிருந்த நிலையில் சில மணித்தியாலங்களில் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

பிரதமர் மோடியின் இம்மாத ஐந்தாம் திகதி அறிவிப்புக்குப் பின்னர் ஜம்மு காஷ்மிருக்குள் எதிர்கட்சித் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும். முன்னர், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தடுக்கப்பட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .