2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

குஜராத்தில் 8 பேர் பலி

Administrator   / 2015 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட்டேல் சமுதாயத்தினருக்கான அதிகரித்த கல்வி, வேலை வாய்ப்புகளைக் கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து உருவான மோதல்களில், இதுவரை எட்டுப் பேர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. அத்தோடு, குஜராத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் காணப்படுகிறது.


இதில், பொலிஸாரினதும் துணை இராணுவப் படைகளினதும் துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். புதன்கிழமை இரவு ஆரம்பித்த மோதல்களில், அடுத்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் நால்வர் அஹமதாபாத்திலும், பனஸ்கந்த மாவட்டத்தின் காட் கிராமத்தில் மூவரும், மெஹசன நகரில் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இறுதியாக வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், ஆகக்குறைந்தது 70 பஸ்களாவது ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .