Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 11 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியாவின் ஜனாதிபதித் தேர்தல்கள் முடிவுகளை, அதன் தற்போதைய ஜனாதிபதி ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, அதற்கெதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை, கண்டனம் வெளியிட்டுள்ளது.
22 ஆண்டுகள் நாட்டை ஆட்சிபுரிந்த தலைவரான யாஹியா ஜெம்மா, டிசெம்பர் 1ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அம்முடிவை ஏற்பதாக அறிவித்தார். ஆனால், அந்த முடிவில் குத்துக்கரணம் அடித்த அவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று, இம்முடிவை ஏற்கப் போவதில்லை என அறிவித்தார். அத்தோடு, புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப் போவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அவரின் நிலைப்பாட்டை ஆழமாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த பாதுகாப்புச் சபை, காம்பியாவின் இறையாண்மை மிக்க மக்களின் முடிவை, அவர் ஏற்க வேண்டுமெனத் தெரிவித்தது.
அத்தோடு, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அடமா பரோவிடம், எந்தவிதமான தாமதங்களுமின்றித் தனது அதிகாரங்களை அவர் கையளிக்க வேண்டுமெனவும் அச்சபை கோரியுள்ளது.
இந்நிலைமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்க ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜெம்மாவின் இம்முடிவு தொடர்பில் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், தேர்தலின் முடிவை முழுமையாக ஏற்குமாறு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago