Shanmugan Murugavel / 2016 மார்ச் 05 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபோட்டின் பிரபலத்தன்மை வீழ்ச்சியடைந்து வந்த வேளையில், டொனி அபோட், அவரது தலைமைப் பணியாளரான பேட்டா கிரட்லினுடன் ஈர்ப்பைக் கொண்டிருந்ததாக வதந்திகள் காணப்படுவதாக சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததாக புதிய புத்தகம் ஒன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பிரதமர் மல்கொம் டேர்ண்புல்லின் அரசாங்கத்தில் சர்வதேச அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் செனட்டர் கொன்செட்டா பைராவன்டி-வெல்ஸ்ஸே, அரசியலானது உள்ளுணர்வுகளைப் பொறுத்தது என டொனி அபோட்டுக்கு கூறியுள்ளார்.
“சரியோ அல்லது பிழையோ, நீங்கள், உங்கள் தலைமைப் பணியாளருடன் படுக்கின்றீர்கள் என்ற உள்ளூர்ணவே காணப்படுவதாகவும், இந்த உள்ளூணர்வை நீங்கள் சமாளிக்க வேண்டும்” என பைராவன்டி-வெல்ஸ் தெரிவித்ததாக, ஊடகவியலாளர் நிக்கி சவ்வாவினால் வெளியிடப்பட்ட ‘த ரோட் டு ருயின்’ என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைதியாக பதிலளித்த அபோட், வதந்திகள், உண்மையற்றவை எனத் தெரிவித்துள்ளார்.
கிரட்லினை பதவியிலிருந்து அகற்றாவிட்டால், பிரதமர் பதவியை அபோட் இழப்பார் என எச்சரிக்கப்பட்ட்டிருந்தார் என மேற்படி புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கிரட்ளின் பதவியிலிருந்து அகற்றப்படாத நிலையில், அபோட், டேர்ண்புல்லினால் பதவி கவிழ்க்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவிக்க இன்று சனிக்கிழமை அபோட் அணுகப்பட்டபோது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago