2021 மே 06, வியாழக்கிழமை

கிழக்கு சீனாவினால் நிலச்சரிவால் 21 பேர் பலி

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 16 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதுடன், நிலச்சரிவில் தப்பித்தோரை தேடும் பணியில் 2,000க்கு அதிகமான மீட்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சில நாட்களாக தொடர்ந்த மழையினால் வேகமாக பரவிச் சென்ற களிமண்ணும் பாறைகளும் ஜீஜாங் மாகாணத்திலுள்ள லிடொங் கிராமத்திலுள்ள வீடுகளைச் சூழ்ந்துள்ளன.

சீன உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு சற்று முன் நிகழ்ந்த நிலச்சரிவில் கிட்டத்தட்ட 30 வீடுகள் முற்றாக புதையுண்டுள்ளன.

மேற்படி கிராமத்தில் சில பகுதிகள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகளை முன்னெடுப்பது சிரமமாக உள்ளது எனத் தெரிவிக்கப்படுள்ளது. இன்னும் 16 பேர் காணாமல் போயுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை ஒரு நபர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள உள்ளூர் அதிகாரிகள், அவர் உறுதியான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். தவிர, மீட்பு பணியாளர்கள், மோப்ப நாய்கள், உபகரணங்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் அனுப்பப்பட்டுள்ளனர்.

காணமால் போனோரில் பெரும்பாலோனோர் சிறுவர்களும் முதியோர்களும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, வீடுகளை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .