2021 ஜனவரி 27, புதன்கிழமை

காஷ்மிர் பத்திரிகைகளை முடக்கியது இந்தியா

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 18 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஷ்மிரில் நாட்கணக்காக இடம்பெற்ற இந்தியாவுக்கெதிரான போராட்டத்தில், டசின் கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில், தகவல்கள் வெளியாவதைத் தடுக்கும் பொருட்டு, இந்தியாவால் நிர்வகிக்கப்படும் பகுதியிலுள்ள அதிகாரிகள், அச்சகங்களை மூடியதோடு, பத்திரிகைகளை தற்காலிகமாக தடை செய்துள்ளனர்.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த மாநில அரசாங்கப் பேச்சாளரும் கல்வி அமைச்சருமான நயீம் அக்தர், உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டும் சமாதான ஏற்பாடுகளை பலமாக்கும் பொருட்டே மேற்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படைகளுக்குமிடையே இடம்பெற்ற மோதலில், பொதுமக்கள் 35 பேரும் ஒரு பொலிஸ் அதிகாரியுமாக 36 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், 40 பேர் இறந்ததாக உள்ளூர் மனித உரிமைக் குழுக்களும் பத்திரிகைகளும் தெரிவிக்கின்றன.

உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்காக ஆயிரக்கணக்கானோர் இடர்பாட்டை எதிர்நோக்கியுள்ள நிலையில், பிரச்சினைக்குரிய இடங்களில் கடுமையான ஊரடங்கு உத்தரவு, தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாகவும் ஞாயிற்றுக்கிழமை (17) காணப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .