Gopikrishna Kanagalingam / 2016 ஜூலை 10 , பி.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மிரின் வடக்குப் பகுதியில், ஆயுதக்குழுவொன்றின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து ஏற்பட்ட வன்முறையில், குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதோடு, 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாதுகாப்புப் படையினரால் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இணைந்த இராணுவ நடவடிக்கையில், பர்ஹான் வனி என்ற போராளிக் குழுத் தளபதி கொல்லப்பட்டார்.
இதனையடுத்து, காஷ்மிரின் பல பகுதிகளிலும் வன்முறை கலந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே, இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படையினரின் சாவடிகளுக்குள் உள்நுழைந்த அல்லது உள்நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமையாலேயே, இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக, பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைமை தொடர்பாக மத்திய உள்விவகார அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மிரின் முதலமைச்சர் மெஹ்பூடா முப்தி இருவரும், பொதுமக்களின் மரணங்கள் தொடர்பாக அனுதாபங்களை வெளிப்படுத்தியதோடு, அமைதியாக இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 hours ago
03 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
03 Jan 2026