2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

சீனாவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் 7 சிறுவர்கள் பலி;20 பேர் காயம்

Super User   / 2010 மே 12 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவிலுள்ள பாடசாலையொன்றில்  இன்று இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் 7 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், இந்தத் தாக்குதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

சீனாவின் வடமேற்குப் பகுதியான கின்டர்கார்டன் எனும் இடத்திலுள்ள பாடசாலையொன்றிலேயே, மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு உள்ளான சிறுவர்கள் அனைவரும் 6 வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள் எனவும் சீன நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, சீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி  நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 28 சிறுவர்கள் உட்பட மூன்று பெரியோர்களும் காயமடைந்திருந்தனர்.

சீனாவில் இதற்கு முன்னரும் பல கத்திக் குத்துத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--