2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

சவூதி அரோபியா விமான நிலையங்களில் புகைபிடிக்க தடை

Super User   / 2010 ஜூன் 27 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரோபியாவில் உள்ள விமான நிலையங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று 150 உறுப்பினர்களை கொண்ட சவுரா கவுன்சிலின் பரிந்துரைக்கு, அந்நாட்டு இளவரசர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இத்தடையை மீறி புகைபிடிப்பவர்களுக்கு விமான மற்றும் போக்குவரத்து ஆணையம் அபராதம் விதிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சவூதி அரேபியாவில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அந்நாட்டில் 60 லட்சம் பேர் புகைப் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். அத்தோடு புகையிலை மற்றும் சிகரெட் நுகர்வில் சவூதி அரேபியா உலகிலேயே ஆறாவது இடத்தில் உள்ளது. 10 சதவீத பெண்கள் மற்றும் 19.3 சதவீத இளைஞர்கள் சிகரெட் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளதாகத் தகவலகள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--