2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

சூடானிய அகதி இறந்தமையையடுத்து அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் கலகம்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு வெளியேயுள்ள அவுஸ்திரேலிய தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சூடானிய அகதியொருவர், நோய் காரணமாக இறந்துள்ளார். இதனையடுத்து, சர்ச்சைக்குரிய குறித்த தடுப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டமொன்று வெடித்துள்ளது.

பப்புவா நியூ கினியின் மனுஸ் தீவிவில், கடந்த வியாழக்கிழமை (22) நிலைகுலைந்து வீழ்ந்த சூடானிய அகதி, அவசர சிகிச்சைகளுக்காக, கிழக்கு அவுஸ்திரேலியாவிலுள்ள பிறிஸ்பேர்ண் வைத்தியசாலையொன்றுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (23) கொண்டுவரப்பட்டு, காயங்கள் காரணமாக நேற்று (24) இறந்திருந்தார். அகதி வழக்கறிஞர்களால் பைஸல் இஷாக் அஹ்மெட் என, 27 வயதான குறித்த சூடானிய அகதி பெயரிடப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அஹ்மெட்டின் இறப்பத்தைத் தொடர்ந்து தடுப்பு நிலையத்திலுள்ள உணவருந்தும் பகுதியில் கலகம் ஏற்பட்டிருந்தது. தற்போது கலகம் முடிவடைந்துள்ள நிலையில், சொத்துக்களுக்கு சிறிது சேதம் ஏற்பட்டதாகவும், எனினும் ஒருவருக்கும் காயமேற்பட்டதாக அறிக்கையிடப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூ  கினி பொலிஸார், இது தொடர்பில் உடனடியாகக் கருத்து எதனையும் தெரிவித்திருக்கவில்லை.

இதேவேளை, அஹ்மெட் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனாலேயே நிலைகுலைந்து வீழ்ந்ததாகத் தெரிவித்த அகதி நடவடிக்கை கூட்டணியின் பேச்சாளர் இயன் றினோடௌல், பல வாரங்களாக அஹ்மெட் சிகிச்சையின்றி இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அஹ்மெட்டின் இறப்பைச் சூழ சந்தேகத்துக்கிடமான நிலைமைகள் எவையும் இல்லையென, அறிக்கையொன்றில் அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .