Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2015 நவம்பர் 26 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச இரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள சீனாவின் சிரேஷ்ட ஊடகவியலாளரான காவோ யு-க்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனைக் காலம், இரண்டு வருடங்களால் குறைக்கப்பட்டுள்ளது.
71 வயதான காவோ, உடல்நிலைக் குறைபாட்டால் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அவரது மேன்முறையீட்டைத் தொடர்ந்து, அவரின் சிறைக்காலம் குறைக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
அரச இரகசியங்களை வெளியிட்டமைக்காக, இவ்வாண்டு ஏப்ரலில், 7 வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காவோ, உடனடியாகவே மேன்முறையீடு செய்திருந்த போதிலும், அதற்கான நீதிமன்ற நடவடிக்கைகள், பிற்போடப்பட்டு வந்தன. இந்நிலையிலேயே, தற்போது அவருக்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆளும் கம்யூனிசக் கட்சித் தலைமைகளால்,2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகசிய ஆவணமொன்றை, செய்தி நிலையமொன்றுக்கு வெளியிட்டதாகவே, இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அந்த ஆவணத்தில், அரசியலமைப்பு ஜனநாயகத்துக்கான செயற்பாட்டாளர்களை அடக்குவதற்காக திட்டங்கள் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago