2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சிரியாவில் எண்ணெய்த் தாங்கிகள் மீது தாக்குதல்கள்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 24 , மு.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எண்ணெய் சுத்திகரிகரிப்பு நிலையங்களில் இருந்து மசகு எண்ணெயையைக் களவாடி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எடுத்து சென்றிருந்த 1000 எண்ணெய்த் தாங்கி வாகனங்கள் ரஷ்ய விமானத்தாக்குதல்களில் அழிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் கடந்த இரண்டு நாட்களில், 472 தீவிரவாதிகளின் இலக்குகள் மீது ரஷ்ய வான் படை நடாத்திய 141 தாக்குதல்களிலேயே மேற்படி இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள வட கிழக்கு சிரியாவில், அமெரிக்க வான் படைத் தாக்குதல் ஒன்றில் 238 எண்ணெய் தாங்கி வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் ஏற்றப்படுவதற்காக அல்-ஹஸகா, டயிர் அஸ் ஸவார் ஆகிய எண்ணெய் தயாரிப்பு நிலையங்களுக்கு அருகிலே, மேற்படி எண்ணெய்த் தாங்கி வாகனங்கள் நின்றபோதே, விமானிகள் அவற்றைக் கண்டதாகவும், எண்ணெய்த் தாங்கி வாகனங்களை அழிக்கத் தொடங்கு முன் சாதாரண சாரதிகளை அங்கிருந்து அகற்றும் முகமாக எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த வான் தாக்குதல் தொடர்பான காணொளி வெளியிடப்படும் என அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்தவாரமும் பிறிதொரு தாக்குதலில், வேறு 116 எண்ணெய்த் தாங்கிகள் அழிக்கப்பட்டிருந்தது.

தங்களால் கைப்பற்றப்பட்ட எண்ணெய் தயாரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் மசகு எண்ணெய் காரணமாக, ஐ.எஸ்.ஐ.எஸ் பாரியளவில் பணமீட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .