2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

சிரியாவில் 26 படைவீரர்கள் ஐ.எஸ்-ஆல் கொலை

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 22 , மு.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் பழைமையான நகரான பல்மைராவுக்கு அருகில், ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவால், சிரியப் படைவீரர்கள் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியா, ரஷ்ய வான் தாக்குதலின் துணையோடு, ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு எதிராக அரசாங்கப் படைகள் கடந்த சில நாட்களாக முன்னேறி வந்த நிலையிலேயே, கடந்த திங்கட்கிழமை (21), பல்மைராவுக்கு மேற்கே நான்கு கிலோமீற்றர் தூரத்தில் இடம்பெற்ற மோதலிலேயே மேற்படி உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும் மேற்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், சிரிய வான் படையினால் ஆதரவளிக்கப்பட்ட இராணுவமும் அதன் நட்புப் படைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுக்கு எதிராக பல்மைராவை சுற்றியும் அல்-குவார்யாட்டயான் நகரத்திலும் ஒருமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சிரிய அரச செய்தி முகவரகமான சனா தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X