2021 மே 06, வியாழக்கிழமை

சில பள்ளிவாசல்கள் கண்காணிக்கப்பட வேண்டும்: ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 22 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, அமெரிக்காவிலுள்ள சில பள்ளிவாசல்களைக் கண்காணிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர்களின் முன்னிலைப் போட்டியாளரான டொனால்ட் ட்ரம்ப், 2001ஆம் ஆண்டில் உலக வர்த்தக மையக் கோபுரங்கள் தாக்கப்பட்டபோது, ஆயிரமாயிரம் பேர், மகிழ்ச்சியுடன் அதைக் கொண்டாடியதாகக் கூறியுள்ளார்.

நாட்டிலுள்ள முஸ்லிம்களின் தரவுத் தளமொன்றைப் பேண வேண்டுமென அவர் தெரிவித்தாரென முன்னரே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவற்றை நிராகரித்த அவர், சிரிய அகதிகளைக் கண்காணிக்க வேண்டுமெனத் தெரிவித்தார். அத்தோடு, இதற்கு முன்னரும் கூட, பள்ளிவாசல்களைக் கண்காணித்த வரலாறு இருப்பதாகவும், எனவே, பள்ளிவாசல்களைக் கண்காணிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

அத்தோடு, ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிபெற்றால், அகதிகள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டுமெனவும், அவர்களை நாட்டில் வைத்திருக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டார்.

உலக வர்த்தக மையத் தாக்குதலை அமெரிக்காவிலுள்ள முஸ்லிம்கள் கொண்டாடினரென முன்னரே தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், அவற்றை பொலிஸார் நிராகரித்திருந்தனர். அத்தோடு, மத்திய கிழக்கு நாடுகளிலேயே அதற்கான கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .