2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

ஜமைக்காவின் எதிரணி வெற்றி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 02 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜமைக்காவில் கடந்த வாரம் இடம்பெற்ற தேர்தலில், எதிர்க்கட்சி வெற்றிபெற்றுள்ளது. எனினும், ஒரேயோர் ஆசனத்தை அதிகமாகப் பெற்றே, இந்த வெற்றியைப் பெற்றுள்ளது.

மிகவும் கடுமையாகப் போரிடப்பட்ட இந்தத் தேர்தலில், 63 ஆசனங்களில் 32 ஆசனங்களை, எதிர்கட்சியான ஜமைக்கத் தொழிலாளர் கட்சி வென்றது. ஆளுங்கட்சிக்கு 31 ஆசனங்களே கிடைத்தன.

இதன்மூலம், இரண்டாவது முறையாகவும் வெற்றிபெறும் பிரதமர் போர்ஷியா சிம்ப்சன்-மில்லரின் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஜமைக்கத் தொழிலாளர் கட்சியின் தலைவர் அன்ட்ரூ ஹோல்னெஸ், புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.

வரிக்குறைப்பு, வேலை உருவாக்கம் ஆகியவற்றை வாக்குறுதிகளாக வழங்கியே, எதிரணி இத்தேர்தலில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .