Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
டாவோ நகரத்தின் மேயராக இருந்த போது, மூன்று பேரைக் கொன்றார் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டே தெரிவித்தமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் கோரியுள்ளார்.
டுட்டேர்ட்டே பதவியேற்ற பின்னர், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் காரணமாக, 6,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகக் கணிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே, தற்போது ஜனாதிபதியின் கருத்துக் குறித்து அதிக கவனம் ஏற்பட்டுள்ளது.
"சட்டத்தை நிலைநாட்டுவதிலும் நிறைவேற்று அதிகாரத்திலிருந்து சுயாதீனமாக இருப்பதற்குமான தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமுகமாக, கொலைக் குற்ற விசாரணையொன்றை, பிலிப்பைன்ஸின் நீதித்துறை அதிகாரிகள் ஆரம்பிக்க வேண்டும்" என, அல் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.
"வாழ்வதற்கான உரிமை, வன்முறையிலிருந்து விடுதலை, போதுமான சட்ட நடவடிக்கை, நீதியான விசாரணை, சட்டத்தின் முன்னர் சமமான பாதுகாப்பு, குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவர் ஆகியவை உள்ளிட்ட சர்வதேசச் சட்டங்களையும், ஜனாதிபதி டுட்டேர்ட்டேயால் வர்ணிக்கப்பட்ட கொலைகள் மீறுகின்றன" என, ஹுஸைன் மேலும் தெரிவித்தார்.
இவற்றுக்கு மேதிகமாக, டாவோவில் இடம்பெற்ற கொலைகள் சம்பந்தமான விசாரணைகள், மீள ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் கோரிய ஹுஸைன், ஜனாதிபதியாக டுட்டேர்ட்டே பதவியேற்ற பின்னர் மிக அதிகளவில் இடம்பெற்றுவரும் கொலைகள் தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கோரினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
55 minute ago