2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

தாய்லாந்தில் பரஸ்பர துப்பாக்கி சூட்டில் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழப்பு

Super User   / 2010 மே 19 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தில்  இராணுவத்தினருக்கும் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில் இத்தாலிய பத்திரிகை நிருபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தாய்லாந்தின் பிரதமர் பதவி விலகக்கோரியும் உடனடியாக பாராளுமன்ற தேர்தலை நடத்தக்கோரியும் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவத்ராவின் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தாய்லாந்து இராணுவம் ஆயிரம் வீரர்களை பாங்காக்கில் போராட்டக்காரர்களின் பகுதிக்குள் அனுப்பியது. போராட்டக்காரர்கள் தாங்கள் இருக்கும் பகுதியை சுற்றிலும் டயர்களால் அமைக்கப்பட்ட தடுப்பு கோபுரங்களை அமைத்திருந்தனர்.

இந்த தடுப்புகளை இராணுவம் தகர்த்தது. போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 5பேர் பலியானார்கள். அவர்களில் ஒருவர் இத்தாலிய பத்திரிகை நிருபர் என்றும் மற்றவர்கள் போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--