2021 மே 08, சனிக்கிழமை

தென் சீனாவை உலுப்பிய குண்டுவெடிப்புகள்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் சீனாவிலுள்ள குவாங்ஸி ஸூவாங் பகுதிகளை உலுப்பிய குண்டுவெடிப்புகளில், குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 51 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பொதிக் குண்டுகளால் தான் இந்தக் குண்டுவெடிப்புகள் ஏற்பட்டப்பட்டதாகவும், அவ்வாறான 17 குண்டுவெடிப்புகள் தொடர்ச்சியாக இடம்பெற்றதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இந்த வெடிப்புகளின் சந்தேகநபராக லியூசெயங் தாய் போ நகரத்தைச் சேர்ந்த 33 வயதான நபரொருவர் காரணமெனச் சந்தேகிக்கப்படுவதாகவும், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவிக்கின்றனர்.

இந்த சந்தேகநபர், பொதிகளில் காணப்பட்ட குண்டுகளை விநியோகிப்பதற்கு, அஞ்சல் பொதி விநியோகிப்பவர்களுக்குப் பணத்தைச் செலுத்தியுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு, சந்தேகத்துக்கிடமான 60 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, புதன்கிழமை இடம்பெற்ற இந்தத் தொடர்ச்சியான வெடிப்புகளைத் தொடர்ந்து, நேற்றைய தினம் புதிதாக வெடிப்பொன்று இப்பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. எனினும், அதில் எவரும் காயமடைந்திருக்கவில்லையென, சீனப் பொலிஸார் அறிவிக்கின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X