2021 மே 18, செவ்வாய்க்கிழமை

துருக்கி இராணுவப் புரட்சி: கலைக்கப்படவுள்ள ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 24 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரம் இடம்பெற்ற, தோல்வியில் முடிவடைந்த இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, துருக்கியின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்களில், 300க்கு மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த சிறப்பு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கலைக்கப்படவுள்ளது. குறித்த படைப்பிரிவுக்கான தேவை இல்லை என பிரதமர் பினாலி யில்ட்ரிம் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தோல்வியில் முடிவடைந்த இராணுவப் புரட்சிக்கு பின்னாலுள்ளார் என ஐக்கிய அமெரிக்காவை தளமாகக் கொண்ட மதபோதகரான ஃபெதுல்லா குல்லேனை குற்றஞ்சாட்டுகின்ற துருக்கி, அவரது மருமகன் ஒருவரை தடுத்து வைத்துள்ளதுடன், குல்லேனின் முக்கிய உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குல்லேனின் வலதுகரம் என வர்ணிக்கப்படும் ஹலிஸ் ஹன்சி என வர்ணிக்கப்படும் கைது செய்யப்பட்டுள்ள மேற்படி நபர், இராணுவப் புரட்சி இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் துருக்கிக்குள் நுழைந்ததாக கருதப்படுவதாக ஜனாதிபதி அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலைகள், தொண்டு நிறுவனங்கள், ஒன்றியங்கள், மருத்துவ நிலையங்கள் உட்பட 2,341 நிறுவகங்களை மூடுவதற்கான உத்தரவை துருக்கி ஜனாதிபதி றீசெப் தயீப் ஏர்டோவான் பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .