2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

நேபாள பிரதமர் மாதவ் குமார் பிரதமர் பதவியை இராஜினாமா

Super User   / 2010 ஜூலை 03 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாள பிரதமர் மாதவ் குமார் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இப்பதவியை இராஜினாமா செய்வதற்கு மாவோயிஸவாதிகளின் அழுத்தமே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக போராட்டங்களை நடத்தி மாவோயிஸவாதிகள் நாட்டு மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தனர். இதனையடுத்து பிரதமர் பதவியைத் தாம் ராஜினாமா செய்வதாகவும் இவர் அறிவித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களை மாவோயிஸ கிளர்ச்சியாளர்கள் பெற்றுக் கொண்டனர். இதனை அடிப்படையாக வைத்து ஆட்சி அமைக்கும் நோக்கில் இவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"ஆரம்பத்திலேயே பிரதமர் பதவியிலிருந்து மாதவ் குமார் விலகியிருக்க வேண்டும். எனினும் காலம் கடந்தாவது இப்போது எடுத்திருக்கும் தீர்மானம் வரவேற்கத் தக்கது" என்று மவோயிஸ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பதவி விலகலையடுத்து மாவோயிஸ கிளர்ச்சியாளர்கள் புதிய பாராளுமன்றத்தை அமைக்கலாம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--