2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

’நியூமோனியா பரவலால் வுஹானில் நான்காவது நபர் இறப்பு’

Editorial   / 2020 ஜனவரி 21 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய கொரனாவைரஸொன்றுக்கு பரவியதைத் தொடர்ந்து, மத்திய சீன நகரமான வுஹானில் நியூமோனியாவால் நான்காவது நபர் இறந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

குறித்த 89 வயதான நபருக்கு இம்மாதம் 13ஆம் திகதி குணங்குறிகள் தென்பட்டதாகவும், கடுமையான சுவாசப் பிரச்சினையை அனுபவித்ததைத் தொடர்ந்து ஐந்து நாட்களின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அறிக்கையொன்றில் வுஹான் மாநகர சுகாதார ஆணைக்குழு கூறியுள்ளது. இவர் நேற்று முன்தினம் இறந்துள்ளார்.

இதேவேளை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட அடிப்படையான சுகாதாரப் பிரச்சினைகளையும் குறித்த நபர் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டுவிட்டர் போன்ற தமது உத்தியோகபூர்வ வெய்போ கணக்கில் வெளியிட்டுள்ள பிறிதொரு அறிக்கையொன்றில், நியூமோனியா மற்றும் பிறிதொரு சந்தேகிக்கப்படும் விடயத்தால் வுஹானிலுள்ள 15 மருத்துவப் பணியாளர்கள் பீடிக்கப்பட்டுள்ளதாக வுஹான் மாநகர சுகாதார ஆணைக்குழு கூறியுள்ளதுடன், தொற்றுக்குள்ளாகிய ஒரு பணியாளர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மேலும் தெரிவித்துள்ளது.

வுஹானில் ஆரம்பித்த குறித்த பரவலானது, சீனத் தலைநகர் பெய்ஜிங்க், ஷங்காய் உள்ளிட்ட பல சீன நகரங்களுக்கு பரவியுள்ளதுடன், தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பானில் இவ்வாறான குணங்குறிகளுடைய நால்வர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

சீன நேரப்படி நேற்று மாலை ஆறு மணி வரை குறித்த தொற்றுக்கு உள்ளாக்கிய 217 புதியவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சீன அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ள நிலையில், அதில் 198 பேர் வுஹானைச் சேர்தவர்கள் ஆவர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--