2021 மே 18, செவ்வாய்க்கிழமை

நீஸ் தாக்குதல்: தாக்குதலாளியுடன் தொடர்புடைய இருவர் கைதாகினர்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 26 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸின் நீஸ் நகரில் இடம்பெற்ற தாக்குதலை மேற்கொண்டவருடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, விசாரணைகளோடு தொடர்புடைய தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கைதுகள், திங்கட்கிழமையன்று நீஸில் வைத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், மேலதிக தகவல்கள் வழங்கப்படவில்லை.

இதேவேளை, இந்தத் தாக்குதல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பரிஸின் வழக்குத் தொடருநர், இந்தத் தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் பௌலெல், இந்தத் தாக்குதலைப் பல மாதங்களாகத் திட்டமிட்டு வந்ததாகத் தெரிவித்தார். அத்தோடு, அவரோடு சம்பந்தப்பட்ட ஐந்து பேர், ஏற்கெனவே உத்தியோகபூர்வ விசாரணைகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .