2021 மே 10, திங்கட்கிழமை

நீஸ் தாக்குதல்: பாதுகாப்பு அறிக்கை மாற்றப்பட்டதா?

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 25 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சனத்திரளினுள் லொறியொன்றை செலுத்திய நபரொருவர் 84 பேரைக் கொன்ற, நீஸ் வாணவேடிக்கை காட்சிப்படுத்தல் இடம்பெற்ற நிகழ்வின் பாதுகாப்புத் தொடர்பான அறிக்கையை மாற்றுமாறு உள்விவகார அமைச்சு அழுத்தம் வழங்கியதாக சிரேஷ்ட பொலிஸ் பெண்மணி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்தமையையடுத்து, புதிய நெருக்கடி நிலையை பிரான்ஸ் அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.

ஜூலை 14ஆம் திகதி இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பொலிஸாரை அனுப்புவதுக்கு பொறுப்பான உள்விவகார அமைச்சர் பேர்னாட் கஸூனோவே, பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக ஏற்கெனவே விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ள நிலையிலேயே, மேற்கூறப்பட்டுள்ள கருத்து வெளியாகியுள்ளது.

மேற்கூறப்பட்டுள்ள கருத்து வெளியாகியமையையடுத்து, கஸூனோவே இராஜினாமாச் செய்ய வேண்டும் என தீவிர வலதுசாரிகள் கூறுகின்ற நிலையில், குறித்த பொலிஸ் பெண்மணிக்கெதிராக மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக கஸூனோவே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர் மாநாடொன்றில் கருத்துத் தெரிவித்த நீஸின் பாதுகாப்பு கமெராக்கள் அமைப்புக்கு பொறுப்பான பொலிஸ் பெண்மணியான சந்ரா பேர்த்தன், தான் தனிப்பட்ட ரீதியாக தாக்குதவதாகவே கஸூனோவே நம்புவார் என்றும், ஆனால், தான் நடந்ததையே தெரிவித்துள்ளதாகவும், இனிமேல், தான் கூறியது தொடர்பில் தீர்மானித்து, தான் கூறிய அனைத்தையும் நிரூபிப்பது விசாரணையின் பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X