2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

‘பகுதியளவு யுத்தநிறுத்தம் தொடரும்’

Editorial   / 2020 மார்ச் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏழு நாள் பகுதியளவு யுத்தநிறுத்தமானது தொடரும் என ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அஷ்ரப் கானி இன்று தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், ஐக்கிய அமெரிக்க – தலிபான் ஒப்பந்தத்திலுள்ள முக்கியமான உள்ளடக்கமான ஏறத்தாழ 5,000 தலிபான் கைதிகளை விடுவிப்பதை ஜனாதிபதி அஷ்ரப் கானி மறுத்துள்ளார்.

கட்டார் தலைநகர் டோஹாவில் நேற்றுக்  கைச்சாத்திடப்பட்ட ஐக்கிய அமெரிக்க – தலிபான் ஒப்பந்தத்தின்படி, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடனும் கலந்துரையாடலொன்றை ஆரம்பிக்கும், அல்-கொய்தா உள்ளிட்ட இஸ்லாமிய ஆயுததாரிக் குழுக்களை விரட்டும் உறுதிமொழிகளை நிறைவேற்றினால் ஐக்கிய அமெரிக்காவும், அதன் வெளிநாட்டுப் பங்காளர் படைகளும் தமது படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து 14 மாதங்களுக்குள் வெளியேற்றும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X