2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷராப் மீண்டும் அரசியலில் ஈடுபட தீர்மானம்

Super User   / 2010 மே 21 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலில் மீண்டும்  ஈடுபடுவதற்கு தான் தீர்மானித்திருப்பதாக பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி  பர்வேஷ் முஷராப் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்திச்சேவையான சி.என்.என் செய்திச்சேவைக்கு நேற்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவிக்கான தேர்தலில் தான் போட்டியிடவிருப்பதாகவும் பர்வேஷ் முஷராப் குறிப்பிட்டார்.

பர்வேஷ் முஷராப் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு தான் எப்பொழுது அரசியலில் கால்பதிப்பது  என்பது தொடர்பில் எதனையும் தெரிவிக்கவில்லை

இதேவேளை, பர்வேஷ் முஷராப் புதிய அரசியல் கட்சியொன்றை நிறுவுவது தொடர்பில் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்திருப்பதாக பாகிஸ்தான் நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பர்வேஷ் முஷராப்பிற்கு விடுக்கப்பட்டிருந்த அழுத்தம் காரணமாக 2008ஆம் ஆண்டு தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்திருந்தார். இந்த நிலையில், பாகிஸ்தானிலிருந்து பர்வேஷ் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .