2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

பங்களாதேஷில் மின்மாற்றி வெடித்ததில் பயங்கர தீ; 108பேர் பலி

Super User   / 2010 ஜூன் 04 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 108பேர் பலியாகியுள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.பங்களாதேஷ், பழைய டாக்கா, நஜீராபஜார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மின்மாற்றி வெடித்ததினாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியது. ‌தொழிற்சாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரசாயனப் ‌பொருட்கள் காரணமாக தீ வேகமாக பரவியது. இதனால் சுமார் 108பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அவற்றில் இதுவரையில்  87 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் மீட்புப் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவத்தையடுத்து பலர் படுகாயங்களு‌டன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எவ்வரெனினும் பலியானோரின்  எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதேவேளை, பிரதமர் ஷேக் ஹசீனா , சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளதோடு உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--