2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

பங்களாதேஷ் இரண்டு தலைவர்களின் மரணதண்டனை உறுதிப்படுத்தப்பட்டது

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 18 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களின் மரணதண்டனையை பங்களாதேஷின் உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து அவர்களுக்கு விரைவில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

நாட்டின் சுதந்திரத்துக்காக 1971ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின் போது அட்டூழியங்கள் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு,  பங்களாதேஷின் முன்னணி இஸ்லாமியக் கட்சியின் இரண்டாவது பொறுப்பாளரான அலி அஹசன் மொஹம்மட் முஜாகித், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் சலாவுதீன் குவாதர் சௌத்திரி ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தானிலிருந்து சுதந்திரத்தைப் பெறும் பொருட்டு, எட்டு மாதங்கள் வரையில் இடம்பெற்ற போரில் மூன்று மில்லியன் வரையானோர் உயிரிழந்ததாக பங்களாதேஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த 67 வயதான முஜாகித் மற்றும் சௌத்திரியின் கருணை மனுவை, பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள நீதிமன்றமொன்று நிராகரித்ததையடுத்து, இன்னும் சில வாரங்களில் இவர்கள் தூக்கிலிடப்படவுள்ளனர்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவினால் 2010ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட, சுதந்திரத்தின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான தீர்ப்பாயத்தினால் சர்ச்சைக்குரிய வகையில் பல ஜமாத் தலைவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X