2021 மே 08, சனிக்கிழமை

5 படகுகளின் பணியாளர்களை கடத்தியது அபு சையாப்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 26 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரத்திலிருந்து காணாமல் போயிருந்த மலேஷியாவைச் சேர்ந்த இழுவை நீராவிப் படகுகள் ஐந்தின் பணியாளர்கள், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஆயுதக்குழுவான அபு சையாப்பினால் கடத்தப்பட்டுள்ளதாக, மலேஷியாவின் பொலிஸ்மா அதிபர் காலித் அபு பக்கர் தெரிவித்தார்.

இந்தப் படகுகளின் பணியாளர்களான ஐவரும், கடந்த 18ஆம் திகதி, மலேஷியாவின் மாநிலமான சபாவின் கரையோரமாக வைத்துக் கடத்தப்பட்டுள்ளனர். பணத்துக்காகவே இவர்களது கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன என, பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
இஸ்லாமிய ஆயுதக்குழுவான அபு சையாப், கடந்த சில ஆண்டுகளில் கடத்தல்களால் மாத்திரம் பல மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக, இவ்வாண்டு ஏப்ரலிலும் ஜூனிலும், தமது கப்பக் கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காமை காரணமாக, கனேடியர்கள் இருவரைக் கொன்றிருந்த இக்குழு, கடந்தாண்டில் மலேஷியர் ஒருவரைக் கொனற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X