2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

பயணத்தின் நடுவில் மரணித்த விமானி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் போனிக்ஸிலிருந்து பொஸ்டன் நோக்கிப் பறந்துகொண்டிருந்த அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் தலைமை விமானியொருவர் மரணமடைந்துள்ளார். எனினும், துணை விமானியின் சாதுரியத்தால், பாதிப்புகள் எவையுமின்றி விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

விமானிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவசர மருத்துவ சேவையை அழைத்த துணை விமானி, நியூ யோர்க்கிலுள்ள சிராகியூஸில் விமானத்தைத் தரையிறக்கினார்.

பதற்றமான சூழ்நிலையில் அமைதியுடன் செயற்பட்ட துணை விமானி, 147 பயணிகளுடன் பயணித்த அவ்விமானத்தைப் பாதுகாப்புடன் தரையிறக்கியமைக்காகப் பாராட்டப்படுகிறார்.

மரணமடைந்த விமானி, 57 வயதான மைக்கல் ஜோன்ஸ்டன் என அடையாளங் காணப்பட்டுள்ளார். 25 வருடங்களுக்கும் மேற்பட்ட விமாமனப் பறப்பு அனுபவத்தைக் கொண்ட ஜோன்ஸ்டன், 2006ஆம் ஆண்டில் மாற்றுவழி இதய அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாக அறிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .