2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பிரிட்டிஷின் புதிய பிரதமராக டேவிட் கமரூன்

Super User   / 2010 மே 12 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டிஷின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் டேவிட் கமரூன் பதவியேற்கவுள்ளார்.

பிரிட்டிஷில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று ஐந்து நாள்கள் கடந்துவிட்ட நிலையிலும், அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றிருந்தன.

இந்நிலையிலேயே பிரிட்டிஷின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் டேவிட் கமரூன் பதவியேற்கவிருக்கிறார்.

பிரிட்டிஷில் ஆட்சி அமைக்க 306 ஆசனங்கள் தேவையாகும். இந்நிலையில் நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கு 306 ஆசனங்களும், தொழிற்கட்சிக்கு 258 ஆசனங்களும், லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு 57 ஆசனங்களும் கிடைத்திருக்கின்றன.

இதேவேளை,  தொழிற்கட்சித் தலைவர் கோர்டன் பிரவுன் தனது பதவியை நேற்றிரவு ராஜினாமாச் செய்துள்ளார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--