Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 மே 28 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு பிலிப்பைன்ஸ் நகரமான மறாவியில், பாதுகாப்புப் படைகளுடன் வீதி மோதலில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய ஆயுததாரிகள், 19 பொதுமக்களைக் கொன்றுள்ளதாக, இராணுவம், இன்று (28) தெரிவித்தது.
கொல்லப்பட்ட குறித்த 19 பொதுமக்களுடன் சேர்த்து, ஏறத்தாழ ஒரு வாரமாகத் தொடரும் மோதல்களால் இறந்தோரின் எண்ணிக்கை, குறைந்தது 85 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில், பல்கலைக்கழகமொன்றுக்கு அருகில் இறந்தபடி கண்டெடுக்கப்பட்ட குழந்தையொன்றும் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
மீட்பு நடவடிக்கைகளை, நேற்று (27), தாம் மேற்கொண்டபோதே, தாங்கள் உடல்களைக் கண்டெடுத்ததாக, பிராந்திய இராணுவப் பேச்சாளரான, லெப்டினன்ட் கேணல் ஜோ-அர் ஹெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மறாவியில் புறநகர்களிலுள்ள வீதியொன்றில், மேலும் எட்டு உடல்கள் காணப்படுவதாக,இன்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரிசி ஆலையொன்றினதும் மருத்துவக் கல்லூரியொன்றினதும் பணியாளர்கள் என, குறித்த உடல்களை, உள்ளூர்வாசிகள் அடையாளங் கண்டுள்ளனர்.
மோதல்களில், 13 படைவீரர்களும் இரண்டு பொலிஸாரும் 51 ஆயுதாரிகளும் கொல்லப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலமே, மோதல்களினால் இறந்தோரின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை, குறைந்தது 85ஆக காணப்படுகிறது.
இதேவேளை, குண்டுத் தாக்குதலை அதிகரிக்கவுள்ளதாக, இராணுவம், நேற்று (27) அறிவித்திருந்தது.
4 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
25 minute ago
33 minute ago