Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கிழக்காசிய நாடான பிலிப்பைன்ஸில், மங்குட் சூறாவளி காரணமாகப் பாரிய அழிவுகள் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் நிலையில், வட அமெரிக்க நாடான ஐக்கிய அமெரிக்காவில், புளோரன்ஸ் சூறாவளி, பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.
கரையோர மாநிலங்களான வட கரொலைனா, தென் கரொலைனா ஆகிய மாநிலங்களை, இந்தச் சூறாவளி தாக்கிய நிலையில், இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர் என, அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஐ.அமெரிக்க நேரப்படி, கடந்த வெள்ளிக்கிழமை, வட கரொலைனாவைத் தாக்கிய இச்சூறாவளி காரணமாக, பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்படி, வட கரொலைனாவில் 10 பேரும், தென் கரொலைனாவில் 3 பேரும் உயிரிழந்தனர் என, ஐ.அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.
கரையைத் தாக்கும் போது, முதலாம் வகை சூறாவளியாக அது வகைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், பின்னர், புயலாகத் தரமிறக்கப்பட்டது. ஆனால், கிழக்குக் கரையோரத்தில், தொடர்ச்சியான பாதிப்புகளை அது ஏற்படுத்தியுள்ளது.
இதுவரையான தகவல்களின் போது, சுமார் 20,000 பேர், அவர்களது வீடுகளிலிருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .