Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 24 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்களும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களும், தங்களது கூட்டமொன்றுக்காக சீனாவில் இன்று ஒன்றுகூடியுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஐக்கிய இராச்சியம் எடுத்த முடிவால் (Brexit), பூகோள பொருளாதாரத்தில் நிலையில்லாத தன்மை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
ஜப்பானிய வங்கியின் ஆளுநர் ஹருஹிகோ குரோடா கருத்துத் தெரிவிக்கையில், "சீனாவின் நகரான செங்டுவில் ஜி20 நாடுகளின் நிதித் தலைவர்கள் சந்திக்கையில், Brexit தொடர்பான கலந்துரையாடல், நிகழ்ச்சிநிரலில் முக்கிய இடத்தைப் பிடிக்கும்" என்றார்.
இந்தச் சந்திப்புக்கு முன்னதாக, பூகோள பொருளாதார வளர்ச்சிக்கான எதிர்வுகூறலை, சர்வதேச நாணய நிதியம் குறைத்து வழங்கியிருந்தது. இந்நிலையில், இச்சந்திப்பில் கலந்துகொண்டுள்ள நிதியமைச்சர்களின் கருத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான பேச்சுவார்த்தைகள், இந்த பூகோள பொருளாதாரத்துக்கான இந்த ஆபத்தை மேலும் அதிகரிக்குமெனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரியொருவர் "ஒரு வாரத்தில் அல்லது மாதத்தில், இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவைக் காண்பார்கள் என அர்த்தமில்லை. இந்த நடைமுறை, அதிகமான நேரத்தை எடுக்கலாம்" எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago