Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2015 நவம்பர் 22 , மு.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜெஹ்லும் நகரத்தைச் சேர்ந்த தொழிற்சாலையொன்று, ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொழிற்சாலையின் ஊழியரொருவர், இறைவனை நிந்தனைக்குள்ளாக்கினார் எனக் குற்றஞ்சாட்டியே, இந்தத் தொழிற்சாலைக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழிலாளி, ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் பணிபுரிந்த தொழிற்சாலையும் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், அஹ்மாடி பிரிவினரைச் சேர்ந்த முஸ்லிமாவார். எனினும், அஹ்மாடி பிரிவினரை முஸ்லிம்களென பாகிஸ்தான் அதிகாரிகள் இணைத்துக் கொள்வதில்லை. இஸ்லாத்தின் இறுதி நபி, மொஹமட் இல்லையென்ற அவர்களது நம்பிக்கையே இதற்குக் காரணமாகும்.
இந்நிலையிலேயே, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர், குர்ஆன் நூலொன்றின் பிரதியை எரிக்க உத்தரவிட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அத்தொழிற்சாலையின் பாதுகாப்புப் பிரிவின் தலைமையதிகாரி இவரெனவும், குர்ஆன் பிரதிகளை எரிக்க உத்தரவிட்டாரெனவும், எரிக்கப்பட்ட பிரதிகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிகிக்கின்றனர். அத்தோடு, இன்னும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அப்பகுதியில், இறை நிந்தனைக்கெதிராகபாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதோடு, அதன் ஓர் அங்கமாகவே, அத்தொழிற்சாலை எரிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago