Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 மார்ச் 08 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸின் சர்வதேசத்தரமிக்க முதலாவது அகதிகள் முகாம், திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்புக் காரணங்களால் அது மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
வடக்கு பிரான்ஸ் கரையோரத்திலுள்ள டக்கேர்க் நகருக்கு அண்மையிலுள்ள கிரான்டே-சிந்தே என்ற இடத்திலுள்ள இந்த முகாமில், ஈராக்கைச் சேர்ந்த குர்திஷ் குடும்பங்கள் மூன்று குடியேறியுள்ளன.
எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பினால், உள்ளூராட்சி மன்றத்தின் உதவியுடன் இந்த அகதிகள் முகாம் நிர்மணிக்கப்பட்டது. இந்த முகாமில், மரத்தினால் ஆன, வெப்பப்படுத்தப்பட்ட 200 அறைகள் காணப்படுவதுடன் ஒழுங்கான மலசலகூட வசதிகளும் குளிக்குமிடங்களும் காணப்படுகின்றன.
ஆனால், இந்த முகாமை அமைப்பதற்கு, பொலிஸாரிடமும் தீயணைப்புப் பிரிவிடம் இருந்தும் எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது. போதிய பாதுகாப்பு வசதிகள் காணப்படவில்லை எனத் தெரிவித்தே, அவற்றுக்கான அனுமதி வழங்க மறுக்கப்பட்டது.
இந்த அனுமதி மறுப்பையும் தாண்டியே, இந்த முகாம், பரிஸின் மாநகர சபையால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில், பொதுமக்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லையெனவும் தீப்பிடிக்கும் ஆபத்துக் காணப்படுவதாகவும் தெரிவிக்கும் பிரான்ஸ் மத்திய அரசாங்கத்தின் உள்ளூர்ப் பிரதிநிதி, அது மூடப்பட வேண்டுமெனவும் பணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
4 hours ago
5 hours ago