Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 14 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிக வரவேற்பைப் பெற்றிருக்காத பொருளாதார சீர்திருத்தங்களை அனுமதிக்க எதிர்பார்த்திருக்கும் பிரேஸில் அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியாக, இடைக்கால ஜனாதிபதி மைக்கல் தெமருக்கு நெருக்கமானமொருவர், கீழவைக்கு சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடுமையான போட்டியுடன் இடம்பெற்ற தேர்தலின் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பின் போது, டி.இ.எம் என அறியப்படும் வலதுசாரிக் கட்சியான ஜனநாயகக் கட்சியின் றொத்திரிகோ மய்யா, பரந்தளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பயிற்றப்பட்ட பொருளாதார நிபுணரான மய்யா, அரசியலுக்கு வர முன்னர், குறிப்பிட்ட காலம், வங்கித் துறையில் பணியாற்றியிருந்தார். இந்நிலையில், கருத்து தெரிவித்த அவர், நூற்றாண்டின் மோசமான பொருளாதார சரிவிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு தெமருக்கு உதவப் போவதாக கூறியுள்ளார்.
நெறிமுறைகளை மீறியதால் வெளியேற்றத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்ட முன்னாள் சபாநாயகர் எடுவார்டோ குன்ஹா, கடந்த வாரம் பதவி விலகியிருந்த நிலையில், பிளவுபட்டுள்ள கட்சிகளிலிருந்து டசின் கணக்கானோர் சபாநாயகர் பதவிக்காக போட்டியிட்டிருந்தனர்.
ஆரம்பத்தில், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட குன்ஹா முயன்றபோதும், தெமரின் சகபாடிக் கட்சிகளான பிரேஸிலியா சமூக ஜனநாயகக் கட்சி போன்றவற்றால் உத்தியோகபூர்வமாக ஆதரிக்கப்பட்டு, போட்டியாளரான றொஜெரியோ றோஸோ பெற்ற 170 வாக்குகளுக்கு எதிராக 285 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இதேவேளை, தெமருக்கு ஆறுதலாக, அவரது பிரேஸிலியன் ஜனநாயக முன்னணி கட்சியின் வேட்பாளர் மார்ஷெல்லோ கஸ்ரோ தோற்கடிக்கப்பட்டு மூன்றாமிடத்தையே பெற்றிருந்தார். இவர், முன்னாள் ஜனாதிபதி றூசெப்க்கு எதிரான வாக்களிப்பில் அவருக்கு சார்பாக வாக்களித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
6 hours ago