2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

'முஸ்லிம்களுக்கெதிரான பிக்குகளோடு எங்களுக்குத் தொடர்பில்லை'

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 13 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரில் முஸ்லிம்களுக்கெதிரான கருத்துகளை வெளிப்படுத்திவரும் கடும்போக்குவாத பௌத்தர்களுக்கும் தங்களுக்கும் தொடர்புகள் கிடையாது என, முன்னணி பிக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவான சங்க மகா நாயக்கச் செயற்குழு அறிவித்துள்ளது.

குறித்த கடும்போக்குவாத பௌத்தக் குழுவால், நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறை அதிகரித்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட "மா பா தா" என்ற இக்குழு, மியான்மாரில் இடம்பெறும் முஸ்லிம்களுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களின் முன்னின்று வந்தது. அத்தோடு, நாட்டின் சங்க விதிகளுக்கு அமைவாகவே தமது அமைப்பு உருவாக்கப்பட்டதாக, அக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது.

எனினும், இதை மறுத்துள்ள சங்க மகா நாயக்கச் செயற்குழு, "சங்க அமைப்பின் அடிப்படையான விதிகள், நடைமுறைகள், பணிப்புரைகளில் மா பா தா குழு உள்ளடக்கப்படவில்லை" என அறிவித்துள்ளது.

"1980ஆம் ஆண்டில் முதலாவது சங்க மாநாட்டிலிருந்து, 2014ஆம் ஆண்டில் இடம்பெற்ற 5ஆவது சங்க மாநாடுவரை, எந்தவொரு சங்க கூட்டத்திலும், மா பா தா குழுவை ஏற்றுக் கொண்டதுமில்லை, அதை உருவாக்கியதுமில்லை. அத்தோடு, மா பா தா என்ற சொற்றொடரை அது பயன்படுத்தியதுமில்லை" என, அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .