2021 மே 08, சனிக்கிழமை

யூத அரசியல்வாதிகள் அல்-அஸ்காவுக்கு நுழைய தடை விதிப்பு

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அல்-அஸ்கா பள்ளிவாசல் பகுதிக்குள் நுழைய இஸ்ரேலிய அரசாங்க அமைச்சர்கள் மற்றும் இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுக்குமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக இஸ்ரேலியர்களுக்கும், பலஸ்தீனர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, முஸ்லிம்களாலும், யூதர்களாலும் தமது புனித பகுதியென உரிமை கொண்டாடிவரும் ஜெருசசேலம் பகுதியில் மோதல்கள் ஏற்பட்டிருந்தன.

கடந்த வார இடம்பெற்ற பாதுகாப்பு ஆலோசனையின்போதே தனது உத்தரவை பிரதமர் பிறப்பித்ததாகவும், எனினும் உத்தியோகபூர்வமாக அமைச்சரவை அமைச்சர்களுக்கு தனது உத்தரவை அவர் அறிவிக்கவில்லையெனவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் முஸ்லிம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இப்போதும் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் யூரி ஏரியல் உட்பட, கடந்த வாரங்களில் அல்-அஸ்கா பகுதிக்கு விஜயம் செய்திருந்த சில யூத அரசியல்வாதிகள், யூதர்கள் அங்கு வழிபாடு செய்ய அனுமதியளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக தமது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

தற்போது யூதர்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் அங்கு செல்ல அனுமதிக்கப்படுகின்ற போதும், அங்கு வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X