2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ராஜா மீது வழக்கா? சீறுகிறார் சு.சுவாமி

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா மீது, பொலிஸாரால் முதற்தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு, வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில், பா.ஜ.கவின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியன் சுவாமி, கண்டனம் தெரிவித்துள்ளார்.

எச். ராஜாவின் செயற்பாடுகளை, “இந்து உரிமைகளுக்கான போராட்டம்” என வர்ணித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, அதற்காக அவரைப் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், இந்தியாவில் பயங்கரவாதியாகக் கருதப்படும் பிரபாகரனின் புகைப்படங்களை, தமிழ்நாட்டில் வைத்திருக்கலாம் என்ற நிலை காணப்படுகிறது எனவும், அரசியல்வாதியான சீமான், பொலிஸ் நடவடிக்கையின்றி எதையும் கூறலாம் என்ற நிலை காணப்படுகிறது எனவும் குற்றஞ்சாட்டியுள்ள சுவாமி, இவ்வாறான நிலை உள்ளபோது, “முதற்தகவல் அறிக்கையைப் பொலிஸார் பதிவுசெய்திருப்பது கேலிக்கூத்தானது” என்றும் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவர் தெரிவித்த இக்கருத்துகளைத் தொடர்ந்து, கடும்போக்கு இந்துத்துவாவைப் பின்பற்றும் பலரும், அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன், ராஜாவுக்கான ஆதரவை வெளிப்படுத்தியமைக்கு நன்றி தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .