2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

றொக்கெட் தாக்குதலில் அமெரிக்க ஈரூடக படைவீரர் பலி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 20 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கின் மொசூல் நகரத்துக்கு வெளியே ஏவப்பட்ட றொக்கெட் ஒன்றில், ஐக்கிய அமெரிக்காவின் ஈரூடகப் படைப்பிரிவு வீரரொருவர் கொல்லப்பட்டதுடன் ஐக்கிய அமெரிக்காவின் துருப்புக்களில் பணியாற்றும் வேறு சிலர் காயமடைந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது.

ஈராக்கின் வடக்கு நகரமான மொசூல் ஆனது ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே, ஐக்கிய அமெரிக்கத் துருப்புகள், ஈராக்கிய இராணுவத்துக்கு பயிற்சியளித்துக்கொண்டிருந்த தளத்தை நோக்கி எதிரிப் படைகளால் இரண்டு றொக்கெட்கள் ஏவப்பட்டதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொசூல் மீது தாக்குதல் நடாத்துவதற்காக இந்த மக்முர் தளத்திலேயே ஈராக்கியத் துருப்புக்கள் தயார்படுத்தல்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்கப் படைகள், 2014ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஈராக்கிற்குள் மீண்டும் நுழைந்த பின்னர், ஐக்கிய அமெரிக்கப் படை வீரரொருவர் கொல்லப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X