Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 மே 18 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் உத்தேச வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், தான் ஜனாதிபதியானால், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வடகொரியா தொடர்பான அவரது திட்டங்களைக் கேட்டபோது, அவற்றை வெளியிட முடியாது எனத் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், ஆனால், அந்நாட்டின் தலைவர் கிம் ஜொங்-உன்னுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவார் எனத் தெரிவித்தார். 'நான் அவருடன் பேசுவேன். அவருடன் பேசுவதில் உனக்குப் பிரச்சினை இருக்காது" என்றார்.
தொடர்ந்து, வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கு அறிவுரை வழங்குவாரா எனக் கேட்கப்பட்டபோது, 'நிச்சயமாக" என அவர் பதிலளித்தார். இவ்விடயம் தொடர்பில், வடகொரியாவின் பிரதான இராஜதந்திரத் தோழமையான சீனாவுக்கு, அழுத்தம் வழங்கவுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
டொனால்ட் ட்ரம்ப்பின் இந்தப் போக்கு, அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான பராக் ஒபாமாவின் நடைமுறைகளை விட மாறானதாகும். வடகொரியா விடயத்தில் ஒபாமா, நேரடியாகத் தலையிடாமல், உயர்நிலை அதிகாரிகள் மூலமாகவே நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கமாகும்.
அமெரிக்காவின் மற்றொரு முரண்பாடுள்ள நாடான ரஷ்யாவின் ஜனாதிபதியான விளாடிமிர் புட்டின் மீது, கடந்த காலங்களில் அதிகளவிலான பாராட்டை வழங்கிய ட்ரம்ப், தற்போது அதைக் குறைத்துள்ளார். அத்தோடு, தன்னைப் பற்றி புட்டின் புகழ்ந்தமையும், பெரிதளவில் உதவாது எனத் தெரிவித்தார். 'என்னைப் பற்றி அவர் நல்ல விடயங்களைத் தெரிவித்தாரென்பது, பேரம்பேசலில் அவருக்கு உதவுமென அர்த்தமில்லை. அது அவருக்கு உதவவே உதவாது" எனத் தெரிவித்தார்.
20 minute ago
36 minute ago
46 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
36 minute ago
46 minute ago
59 minute ago