2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவருக்குக் காயம்

Editorial   / 2017 மே 30 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவுக்கு எதிராக, வெனிசுவேலா தலைநகர் கராகஸில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆர்ப்பாட்டத்தின் விளைவாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைக் கலைத்த பாதுகாப்புப் படைகளே, எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவரைக் காயப்படுத்தியுள்ளன.

மிரன்டா மாநிலத்தின் ஆளுநரும் இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவருமான ஹென்றிக் கப்ரிலெஸ், காயமடைந்தவர்களில் ஒருவராவார்.  தங்கள் மீது மறைந்திருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்த அவர், “இந்த அரசாங்கம், கொல்வதற்கும் எதையும் எரிப்பதற்கும் திறன் கொண்டது” என்று தெரிவித்தார்.

அதே ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்க்கட்சியைச் சேர்ந்த மற்றுமொரு தலைவரான கார்லொஸ் பப்பரோனி, நீர்த்தாரைப் பிரயோகத்தால் கீழே வீழ்த்தப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவரின் தலையில் தையல் போடப்பட வேண்டியேற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் விளைவாக, மேலும் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மதுரோவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள், கடந்த 2 மாதங்களாக, நெடுஞ்சாலைகளை முடக்கிவருவதோடு, தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், விரைவில் தேர்தலை நடத்த வேண்டுமென்பதும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென்பதும், அவர்களின் கோரிக்கைகளாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .