2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

வருமான வரி முன்மொழிவை மீளப்பெற்றார் டேர்ண்புல்

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கன்பெராவில் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பில், வருமான வரி மாற்றங்கள்  தொடர்பான இணக்கத்தை அரசாங்க மற்றும் பிராந்தியத் தலைவர்கள் எட்டியிருக்கவில்லை.

எனினும் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், 2.9 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வைத்தியசாலை நிதிக்கு அவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

பொதுநலவாயத்தால் வழங்கப்படும் சிலவற்றை நிறுத்தி அதற்குப் பதிலாக வருமான வரியின் குறிப்பிட்ட ஒரு சதவீதத்தை சுயாதீனமாக வருமான வரியில் அறவிடுவோம் என மல்கொம் டேர்ண்புல் மாநிலங்களையும் பிராந்தியங்களையும் கேட்டிருந்த போதும் எந்தவொரு இணக்கப்பாடும் ஏற்பட்டிருக்கவில்லை. மாறாக, வருமான வரி வருமானத்தை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்வதை கவனத்திலெடுக்குமாறு தலைவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையிலேயே, வருமான வரியில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த டேர்ண்புல், ஆரம்ப கட்ட முன்மொழிவு திரும்பப் பெறப்படுவதாக தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X