2021 மார்ச் 08, திங்கட்கிழமை

வௌ்ளப்​பெருக்கால் உயிரிழப்புகள் 59ஆக அதிகரிப்பு

Editorial   / 2017 ஜூலை 17 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வௌ்ளப்பெருக்குக் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, தற்போது 59ஆக அதிகரித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக, 24 மாவட்டங்களைச்​ சேர்ந்த 1 மில்லியன் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

அசாம் மாநிலத்தின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் தகவல்களின் படி, 1,795 கிராமங்களைச் சேர்ந்த 1,193,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

மேலும், 66,516 ஹெக்டேயர் விவசாய பயிர்நிலமும் இதனால் நாசமாகியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 129 முகாம்களில், தற்போதைக்கு, 25,000 பேர் வரை தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  

காசிரங்கா தேசியப் பூங்காவின் 52 சதவீதமான நிலப்பரப்பு நீரில் மூழ்கியுள்ளதோடு, வேட்டையாடுதல்களைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில், 93 முகாம்களும் பாதிக்கப்பட்டுள்ளன.  

பூங்காவின், நீரில் மூழ்கியுள்ளப் பகுதிகளில் தவித்துக்கொண்டிருக்கும் விலங்குகளைப் பாதுகாப்பாக மீட்பதற்கு, மேலதிகப் படைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  

இந்த வெள்ள அனர்த்தம் காரணமாக, பல்வேறு மாவட்டங்களுக்கான பிரதான வீதிகள், பாலங்கள் தடைப்பட்டுள்ளதோடு, போக்குவரத்துச் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. பிரம்மபுத்ரா நதி பெருக்கெடுத்தமையால், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .