2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

வைகோவுக்கு எதிர்ப்பு; பார்க்காமலேயே திரும்பினார்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடல்நலக் குறைவு காரணமாக, தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் மு.கருணாநிதியைப் பார்வையிடுவதற்காகச் சென்ற ம.தி.மு.க தலைவர் வைகோவுக்கு வெளிப்படுத்தப்பட்ட எதிர்ப்பால், கருணாநிதியைப் பார்க்காமலேயே அவர் திரும்பினார்.

வைகோவின் வாகனத்தைச் சூழ்ந்துகொண்ட தி.மு.க தொண்டர்கள், ஆவரைப் பார்த்து "துரோகி" எனச் சத்தமிட்டதோடு, அவரது காரை மடக்கினர். அத்தோடு, அவரது கார் மீதும் செருப்பு வீசப்பட்டது. அதையடுத்து அவர், அங்கிருந்து திரும்பினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .